வெளிநாட்டு வாழ் பறவைகள் வரத்து குறைய என்ன காரணம்.!

Advertisements

வெளிநாட்டு வாழ் பறவைகள் வரத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு என்று பறவைகள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வலசை வரும் பறவைகளின் காலம் பொதுவாக அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்பதால், நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

அதைப்போல் இந்த ஆண்டும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரவெட்டி பறவையின் சரணாலயம் , சுக்கிரன் ஏரி , கலந்துகுளம், மற்றும் சித்தேரி போன்ற 10 இடங்களில் திருச்சி பிஷப் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் 100 பேர் பறவைகள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பில் திபெத் மற்றும் லடாகில் இருந்து வருகை புரிந்த வரித்தலை வாத்து மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஊசி வாழ்வாத்து, வெண்புருவ வாத்து, தட்டை வாயன் போன்ற பல்வேறு வலசை பறவைகள் மற்றும் இருப்பிட பறவைகள் கணக்கெடுக்கப்படட்து .

இந்தக் கணக்கெடுப்பில் வெளிநாட்டு வாழ் பறவைகள் வரத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது என்றும் உள்ளூர் பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது என்றும் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *