இந்த வருஷம் கிறிஸ்துமஸ் விழாவில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா..? அது என்ன தெரியுமா.!

Advertisements

வருகிற 25-ம் தேதி உலகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளான கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கம் போல் இல்லாமல் எண் கணித ஜோதிடப்படி மிகவும் விசேஷமான கிறிஸ்துமஸ் விழாவாக பார்க்கப்படுகிறது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கிறிஸ்மஸ் விழா அதிசய நிகழ்வாக நடைபெற காத்திருக்கிறது. உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடுகிறார்கள்.  இது இயேசுவின் பிறந்த தினமாகும். இந்த தினத்தில் திருப்பலி இடுவது,  குடில்கள் அமைப்பது,  கிறிஸ்மஸ் தாத்தா வேடம் போடுவது,  வாழ்த்து அட்டைகளை பரிமாறி கொள்வது , ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வது , கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டுவது,  கிறிஸ்மஸ் மகிழ்ச்சி பாடல்களை பாடுவது சிறப்பு விருந்துகள் என தடபுடலாக இந்த விழா நடைபெறும்,

வீட்டுக்கு வீடு கிறிஸ்மஸ் கேக்குகளை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி கொள்வதும் , மிக மகிழ்ச்சியான நிகழ்வாகும். அதுபோல் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வண்ண விளக்குகள் பொருந்திய நட்சத்திர அடையாளங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த நாளில் உலக கிறிஸ்தவர்கள் அனைவரும் மிகப்பெரிய மகிழ்ச்சியோடு பொழுதை கழிப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் அலங்கார வண்ண விளக்குகளுடன் மிகவும் களைகட்டி நிற்கும் . எங்கு பார்த்தாலும் இயேசுவின் பாடல் ஒலிகளும் பிரேயர் சத்தங்களும் ஒலித்த வண்ணம் இருக்கும்.

அந்த வகையில் வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. வருகிற டிசம்பர் 25ஆம் தேதி என்பது நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் சிறப்பம்சத்தை கொண்டது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் தேதி 25…. 12…. 25 ஆகும். அதாவது 25ஆம் தேதி டிசம்பர் மாதம் 25ஆம் ஆண்டு ஆகும். இது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அதாவது டிசம்பர் 25ஆம் தேதி மட்டுமல்ல இந்த ஆண்டும் 25-ல் வருகிறது.

இதேபோல் தேதியும் ஆண்டும் ஒன்றாக இணைவது அவ்வப்போது நடைபெறுவதில்லை . மிக அபூர்வமாக நடைபெறுவது ஆகும் . இதற்கு முன்னர் கடைசியாக 1925 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா 25 12 25 என முடிவடைந்தது தற்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போல் 25 12 25 என வருகிறது. இதே போல் ஒரு கிறிஸ்துமஸ் விழாவை காண வேண்டும் என்றால் இன்னும் நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் நியூமராலஜி மற்றும் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கைகளைக் கொண்டு இருக்கிறது.ஒரு நூற்றாண்டுக்கு பிறகு,  தற்போது கிறிஸ்துமஸ் வருவதால் இந்த நாளில் இருந்து அனைவருக்கும் இயேசுவின் மிகப்பெரிய பேரருள் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா மிகக் கோதகாலமாக நடைபெற இருக்கிறது.

அரசியல் ரீதியாக கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன . அந்த வகையில் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விடக்கூடாது என்பதில் திமுக மேலிடம் மிக உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் திருநெல்வேலியில் வருகிற இருபதாம் தேதி நடைபெற இருக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
பங்கேற்கிறார். அன்றைய தினம் காலை அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் மாலையில் கிறிஸ்தவர் நல்லெண்ண இயக்கம் சார்பில் பாளையங்கோட்டையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார் . இதே போல் கன்னியாகுமரி மாவட்டம் அருமணையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் சிறுபான்மையினின் வாக்கு வங்கி பல தொகுதிகளில் கணிசமாக இருக்கிறது இதை இழந்துவிட்டால் தென்மாவட்டங்கள் தங்களது கையை விட்டு போய்விடும் என்பதை திமுகவும் காங்கிரசும் உணர்ந்திருக்கின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் , சி எஸ் ஐ கிறிஸ்தவ பேராயர் , மற்றும் குருமார்களை சந்தித்து பேசி விட்டு சென்றார் .

இதுபோல் தூத்துக்குடி அரசு விழாவுக்கு சென்றிருந்த போதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் ஆயர்களை முதல்வர் சந்தித்து பேசினார் . இந்த நிலையில் தான் தற்பொழுது கிறிஸ்மஸ் விழாவிலும் அவர் பங்கேற்க இருக்கிறார். திமுக கூட்டணிக்கு இதுவரை சாதகமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளில் இந்த முறை நடிகர் விஜய்யால் சேதாரம் உண்டாகலாம் என உளவுத்துறை எச்சரித்திற்கும் நிலையில் அதனை சரி செய்யும் விதமாக முதல்வரும் துணை முதல்வரும் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *