
அரியலூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 12 பேர் பலி. Nattu Vedi
அரியலூர்: தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரித்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில்11 பேர் பலியகினர்.
வெடி விபத்து ஏற்பட்டு அதிக அளவிலான பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் உடனடியாக அருகில் சென்று தீயை அணைக்க முடியவில்லை. இந்த வெடி விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். சமீபகா



