
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் அவசர அவசரமாக இரண்டு நாள் பயணமாக திடீரென டெல்லி கிளம்பி சென்று இருக்கிறார். அங்கு பாரதிய ஜனதா கட்சி முன்னணி தலைவர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். தற்பொழுது அவர் டெல்லி சென்ற நிலையில் , தமிழக பாஜக கூட்டணியில் இறுதி கட்ட முடிவுகள் எட்டப்பட இருக்கின்றன, டெல்லி சென்ற நைனார் நாகேந்திரன் பல முக்கிய தகவல்களுடன் சென்று இருக்கிறார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது டெல்லி பாஜக மேலிடம் தமிழ்நாடு மீது குறி வைத்து பணியாற்ற தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி உத்தரவின் பேரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர நடவடிக்கைகளில் களமிறங்கி இருக்கிறார்.முதல் கட்டமாக அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை இணைப்பதற்கான பணிகளை தொடங்கினார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில், அவர்களை பாஜகவுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார், அப்பொழுது பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் , இது பற்றிய பேச்சுவார்த்தை நீண்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முப்பது தொகுதிகளை ஒதுக்கி தருவதாக கூறி இருக்கிறார்,
டெல்லி பாஜக மேல் இடம் 60 தொகுதிகளை விரும்பி கேட்கிறது. இதில் குறிப்பாக சென்னையில் எட்டு தொகுதிகள் தேவைப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக தலங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த தொகுதிகளையும் ஒதுக்கி தரும்படி நைனார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார் . ஆனால் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கும் பொழுது தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தான் மிகவும் செல்வாக்கு பெற்று இருக்கிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் ஏராளமான சிரமங்கள் இருக்கின்றன. மேலும் புதிய கூட்டணிகள் சேரும் பொழுது அவர்களுக்கும் நாங்கள் தொகுதிகள் ஒதுக்கி தரப்பட வேண்டி இருக்கிறது . நீங்கள் கேட்கும்படி ஆன்மீகம் தொடர்பான தொகுதிகளை குறிப்பிட்டு ஒதுக்கி தர முடியாது. மேலும் சென்னையில் பல தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட்டால் தான் வெற்றி பெற முடியும் மொத்தமாக 30 தொகுதிகளை ஒதுக்கி தருகிறேன் என்று இறுதி முடிவாக ஆணித்தரமாக பேசி விட்டார்.
இதன் பின்னர் தான், நைனார் நாகேந்திரன் டெல்லிக்கு கிளம்பி சென்றார். நைனார் நாகேந்திரனுடன் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , கருப்பு முருகானந்தம் ஆகியோரும் உடன் சென்றனர். நைனார் நாகேந்திரன் டெல்லிக்கு கிளம்பி செல்லும் பொழுது தமிழ்நாட்டில் 55 தொகுதிகளுக்கான பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலையும் கையில் எடுத்துச் சென்றிருக்கிறார் . அதிமுகவிலிருந்து எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் தற்போதைக்கு 55 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தயார் செய்த நிலையில் அந்த பட்டியலை டெல்லி பாஜக மேலிட தலைவர் ஜே பி நட்டாவிடம் வழங்கியிருக்கிறார் .
இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசி இருக்கிறார் .டெல்லி பாஜக மேல் இடத் தலைவர்களிடம் நயினார் நாகேந்திரன் தனித்தனியாக சந்தித்து பேசிய போது , அதிமுக தரப்பில் 30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி தருவதாக சொல்கிறார்கள். என்ற தகவலை தெரிவித்து இருக்கிறார் . இதனை தொடர்ந்து 40 தொகுதிகளாவது இறுதிக்கட்டத்தில் பெற்றாக வேண்டும் என பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
இதற்கிடையே கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நைனார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த பிரச்சாரம் புதுக்கோட்டையில் முடிவடைகிறது . அன்றைய தினம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் . புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார பயணம் முடிவு தேதியில் அவர் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
இதற்கிடையே பாஜக கூட்டணியுடன் அன்புமணி சேர்வது முடிவாகி இருக்கிறது அதே சமயம் ராமதாசும் இணைந்தால் நன்றாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கருதுகிறார் இதன் நிமித்தமாக அடுத்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இறுதி கட்ட முடிவுகளை எடுக்கிறார் . .மேலும் ராமதாசை சந்தித்து இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேச இருக்கிறார். இது தவிர பிரேமலதா விஜயகாந்த் ஜான் பாண்டியன் பாரிவேந்தர் ஏசி சண்முகம் டாக்டர் கிருஷ்ணசாமி என பலரையும் சந்தித்து பேச இருக்கிறார்.
தற்பொழுது அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் இறுதி கட்ட நிலையில் எட்டி உள்ளார்கள் வெகு விரைவிலேயே இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




