
திமுக ஆட்சியில் நான்காண்டுகளாக மின்கம்பங்கள், மின்கம்பிகளை முறையாகப் பராமரிக்காததால் உயிர்ப்பலி ஏற்படுவதாகப் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் அலட்சியத்தால் தாம்பரத்தில் கடைக்குச் சென்ற அஸ்வின் என்ற இளைஞர் மின்கம்பி உரசியதில் உயிரிழந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்காண்டுகளாக முறையாகப் பராமரிப்பின்றிக் கிடக்கும் மின் கம்பங்களால் ஏற்படும் விபத்துகளும், உயிர்ப் பலிகளும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இன்னும் சில வாரங்களில் பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால், தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களைச் சரி செய்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

