M. K. Stalin: 3-வது நாளாக நிவாரண பொருட்களை வழங்கினார்!

Advertisements

M. K. Stalin: கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனகாபுத்தூரில் ஏற்பாடு செய்திருந்த நிவாரண முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு போர்வை, வேட்டி, சேலை, அரிசி, பிரட், மளிகை பொருட்கள், பால் மற்றும் சாப்பாடும் வழங்கினார்.

சென்னை: மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.

சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

நேற்று முன்தினம் சென்னை, கண்ணப்பர் திடல், ஓட்டேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்கினார். நேற்று 2-வது நாளாக தரமணி, துரைப்பாக்கம் பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றின் முகத்துவாரம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார்.

இன்று 3-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாவரம் பகுதிக்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.பல்லாவரம், பம்மல் வழியாக அனகாபுத்தூர் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனகாபுத்தூரில் ஏற்பாடு செய்திருந்த நிவாரண முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு போர்வை, வேட்டி, சேலை, அரிசி, பிரட், மளிகை பொருட்கள், பால் மற்றும் சாப்பாடும் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் சக்கரபாணி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் வெள்ள பாதிப்பு குறித்து எடுத்துக் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் ராகுர் நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் நரேஷ்கண்ணா, வே.கருணாநிதி, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *