
கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
கோவை, கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு நடைபெறுகிறது. இதற்காக, ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியிலிருந்து விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையத்திற்குப் பிரதமர் மோடி வருகிறார்.
அப்போது, அவருக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்னர், அவர், கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்குச் செல்கிறார். இதையடுத்து, பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் உதவித்தொகையை வழங்கி பேச உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர், நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் கோவை விமான நிலையம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்குக் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





