
சென்னை: டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் மோகன், அமெரிக்க நீரிழிவு சங்கம் மற்றும் எமோரி பல்கலையின் விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதுகளைப் பெறும் முதல் இந்திய டாக்டர் மோகன்.
டாக்டர் மோகனுக்கு, அமெரிக்க நீரிழிவு சங்கம், ‛ தொற்றுநோயியலில் சிறந்த சாதனைக்கான 2024ம் ஆண்டில் கெல்லி வெஸ்ட்’ விருதை வழங்கிக் கவுரவித்து உள்ளது. நீரிழிவு தொற்றுநோயியலில் குறிப்பிடத் தக்க பங்கு ஆற்றியதற்காக அந்தத் துறையின் தந்தையென அழைக்கப்படும் கெல்லி வெஸ்ட் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதைப் பெற்ற டாக்டர் மோகன், தெற்கு ஆசியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அதன் சிக்கல்கள்குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளார்.
அதேபோல், எமோரி பல்கலையின் ‛ஈஜிடிஆர்சி டிஸ்டின்குயிஸ்ட் லெக்சர் விருது’ -ம் மோகனுக்கு வழங்கப்பட்டது.
இந்த இரண்டு விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை டாக்டர் மோகன் பெற்றுள்ளார்.

