
அப்படியான படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துக் குறிகிய காலத்திலேயே முன்னணி இடத்தைப் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இன்னும் பொறுப்போடு கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தப் படத்திற்கு பின்பு தான் வந்தது. ஆனால் எல்லா படங்களும் அப்படி அமையாது.
செட்டிலிருந்து வந்தபிறகும் அந்தக் கதாபாத்திரத்துடன் எமோஷன் ஆன ஒரு உறவு நீடிக்கிறது என்றால் அது நல்ல படம். அந்த மாதிரியான மேஜிக் சில நேரங்களில் மட்டுமே நடக்கும். அப்படியான படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.


