
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்கு எதிரான தமிழக வெற்றி கழகத்தின் மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வர உள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்தச் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவில்,கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக ஐகோர்ட்டு கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் இதனால் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சில ரவுடிகளால் முன்கூட்டியே திட்டமிட்ட சதியே கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவே, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கரூர் சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
