
கரூர்க் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரித் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்த வழக்குத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
