
கரூரில் கூட்ட நெரிசல் உயிரிழப்புக் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் நாள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்தும், கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதை அக்டோபர் பத்தாம் நாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
