
கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீசுவரி கோவிலில் தசரா திருவிழாவை முதலமைச்சர் சித்தராமையா, புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஸ்டாக் ஆகியோர் தொடக்கி வைத்துள்ளனர். நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீசுவரி கோவிலில் தசரா தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் சித்தராமையா, புக்கர் பரிசுபெற்ற எழுத்தாளர் பானு முஸ்டாக், அமைச்சர்கள் மகாதேவப்பா, சிவராஜ் தங்கத்கி, பாட்டீல், வெங்கடேஸ், மாவட்ட ஆட்சியர் இலட்சுமிகாந்த ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். மொழிவாழ்த்துடன் விழா தொடங்கியது.
வெள்ளித் தேரில் எழுந்தருளிய சாமுண்டீசுவரிக்கு விழாக் குழுவினர் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
தசரா விழாவைத் தொடக்கி வைத்த எழுத்தாளர் பானு முஸ்டாக், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் இலட்சுமிகாந்த ரெட்டி நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.



