
ஒரு ஆர்ப்பாட்டம் ஊர்வலம் போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே இப்படிப்பட்ட போக்கைக் காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
“நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர் கே.பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு உண்டான பரிகாரம் காண முடியும்.
அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை. மக்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்குத் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பது கடந்த ஆட்சி காலத்தில் தான் நடந்தது. ஆட்டுமந்தைகள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் பா.ஜ.கவினர் அடைக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேவை என்ன என்பதை அறிந்து அது நிவர்த்தி செய்யப்படும். – அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



