Jairam Ramesh:இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸின் 5 உத்தரவாதம் நிறைவேற்றப்படும்!

Advertisements

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஓராண்டுஆட்சி சாதனைகள்குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியவதாவது: கர்நாடக மக்களுக்குக் காங்கிரஸ் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியுள்ளது. இதேபோல் மத்தியில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஜூன் 4-ம் தேதி ஆட்சிக்கு வந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியான ஐந்து உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும்.

உதாரணத்துக்கு, கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘கிரகலட்சுமி’ திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் 1 கோடியே 21 லட்சம் பெண்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பெண்களுக்கான விலையில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தினந்தோறும் 60 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதுபோக ‘அன்னபாக்கியா’ திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 38 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. பணிவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளம் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, பட்டயப்படிப்பு முடித்தோருக்கு ரூ.1,500 வழங்கும் ’யுவநிதி’ திட்டமும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *