
டில்லியில் உள்ள ஆஃப்கானிஸ்தானின் தூதரகம் மூடப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு, எங்கள் தூதரகத்தின் பதவிக்காலம் முழுவதும் அவர்களின் ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் தூதரகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் “இந்திய அரசாங்கத்தின் ஆதரவு இல்லை , இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருந்து வந்தது. ஆஃப்கானிஸ்தானுக்கும் , இந்தியாவுக்கும் இடையிலான நீண்அகால கூட்டாண்மை ஆகியவற்றை பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆழ்ந்த சோகம் மற்றும் வருத்தத்துடன் தூதரகத்தை மூடுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் தொடர்ச்சியான சவால்களுக்கு” மத்தியில் மூடப்படுவதாக வியாழக்கிழமை அறிவித்தது. செப்டம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தூதரகம் “மிஷன் சாதாரணமாக செயல்பட அனுமதிக்க இந்திய அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நம்பியதாகவும் அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் “மிஷனின் தலைவிதியை முடிவு செய்வது இப்போது இந்திய அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது என்றும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளது.
மேலும் ஆஃப்கன் குடிமக்களுக்காக சோம்பல் அடையாது கடுமையாக அவர்களின் நலனுக்காக அக்கறை கொண்டதாகவும் தெரிவித்தது. இந்திய அரசு ஆதரவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. தாலிபன் அரசை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தலிபான்கள் கைப்பற்றிய சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் சமூகம் கணிசமான சரிவைக் கண்டது, அகதிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்கள் வெளியேறினர்.
இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 2021 முதல் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது, இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான புதிய விசாக்கள் வழங்கப்பட்டன. மேலும் தூதரகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து விட்டது. பணியில் இருந்த சிலர் கூட சில விரும்பத்தகாத சூழ்நிலையில் தான் பணியாற்றினர் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.


