Indian army forces: நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்!

Advertisements

இந்திய ராணுவத்துக்கு ரூ.23,500 கோடியில் நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

புதுடெல்லி: இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீனரக ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவசர கால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்புச் சாதனங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காகப் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக ராணுவத்துக்காக 70 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும் விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிஉள்ளன. இதில் ராணுவத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடியிலும், இந்திய விமானப் படைக்கு ரூ.8,000 கோடியிலும், கடற்படைக்கு ரூ.4,500 கோடியிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *