
இந்தியா அதன் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்பதை ஆப்பரேசன் சிந்தூர் பதிலடி நடவடிக்கை உலகுக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று உரையாற்றும்போது, ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கை இந்தியரின் பெருமிதம் என்றும், அதுக் இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகுக்கு உணர்த்தியதாகவும் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் இந்திய ஆடவர் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதையும், மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றதையும், பார்வை மாற்றுத்திறனாளி மகளிர் அணியினர் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் சுபான்சு சுக்லா பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பியது பெருமிதம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.




