Advertisements

இலங்கை :
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் தொடங்கியது. இதில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா – ஷபாலி வர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். அதிரடியாக விளையாடிய மந்தனா 45 ரன்களும், ஷபாலி வர்மா 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisements


