சினிமாவை என் இறப்பு வரை தொடர்வேன்..!

Advertisements

கே.பாக்கியராஜ் நடித்து இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பிரகதி. இவர் 1990 மற்றும் 2000 காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்களில் கொடிகட்டி பறந்தார். தற்போதும் சினிமாவில் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு பவர் லிப்டிங் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் பலராலும் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் சமீபத்தில் நடந்த ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற பிரகதி, 4 பதக்கங்களை வென்றிருந்தார்.

இந்த நிலையில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரகதி பேசும்போது, “நான் பவர் லிப்டிங் போட்டியில் பங்கேற்பதற்காக ஆரம்ப காலத்தில் ஜிம்மிற்கு சென்றேன். அப்போது நான் அணிந்த உடைகளை வைத்து பலரும் விமர்சித்தனர். ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா?’ என்று கேட்டனர். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த நேரத்தில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஜிம்மிற்கு செல்லும்போது அதற்கேற்ற உடைகளைத்தான் அணிய முடியும். புடவை அணிந்து செல்ல முடியாது. நான் பெற்ற பதக்களின் மூலம், என்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளேன். நான் சினிமாவை விட்டு விலகிவிட்டதாக பலரும் சொன்னார்கள். நான் ஒருபோதும் நடிப்பை விடமாட்டேன். இந்த துறைதான் எனது அடையாளம். நான் சாப்பிடுவதற்கு காரணமாக இருந்த சினிமாவை, என் இறப்பு வரை தொடர்வேன்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *