Hockey India: பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்தியா!

Advertisements

Asian Champions Trophy 2023 hockey | India men’s national field hockey team | Win | Pakistan | LIVE Updates

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வென்ற இந்தியா புள்ளிப் பட்டியலிலும் முதலிடம்

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வென்ற இந்தியா புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியது. சென்னை எம்.ஆர்.கே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடித் தாக்குதல் நடத்திய இந்திய அணிக்குக் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 15வது மற்றும் 23வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் அமர்க்களமாகக் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

3வது குவார்ட்டரில் கிடைத்த ஒரு பி.சி வாய்ப்பில் ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார் (36வது நிமிடம்). பாகிஸ்தான் வீரர்களைத் திணறடித்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 4வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் கொரியாவுடன் நேற்று மோதிய மலேசிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *