
அரியானாவில் இந்தியாவின் முதல் மின்சாரக் கனரக வாகனங்களுக்கான சார்ஜிங், பேட்டரி மாற்று நிலையத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவில் மின்சார பேட்டரியில் இயங்கும் கனரக வாகனங்களின் உற்பத்தியும் பயன்பாடும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நெடுந்தொலைவுக்கு இயங்கும் கனரக வாகனங்களில் ஓய்வுநேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது
அதேநேரத்தில் சார்ஜ் செய்வதற்காகக் காத்திருக்காமல் வண்டியில் உள்ள பேட்டரியைக் கொடுத்துவிட்டு சார்ஜ் ஏறிய பேட்டரியை மாற்றி எடுத்துச் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான வசதியை முதன்முறையாகச் செய்துள்ள அரியானாவின் சோனிபட்டில் உள்ள நிலையத்தை மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார பேட்டரி மூலம் இயங்கும் கனரக வாகனங்கள் மூலம் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும் எனத் தெரிவித்தார்.
