
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையே தான் போட்டி என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பாஜக சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகம் தான் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் 4 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், இப்போது ஐந்து ஆண்டுகளில் 9 இலட்சத்தி 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் ராஜா குறிப்பிட்டார்.


