Guinness World Record: இரண்டு வயதில் 10 விருது.. உலக சாதனை படைத்த சிறுவன்!

Advertisements

கோவையைச் சேர்ந்த இரண்டு வயது மழலை சிறுவன்  உலக வரைபடங்களை அடையாள படுத்துவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளான், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழக பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்  ராஜலட்சுமி  தம்பதிகளின் குழந்தை சாய் சித்தார்த். மணிகண்டன் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் நிலையில் பல்வேறு விதமான புத்தகங்கள், இந்திய மற்றும் உலக வரைபடங்கள், தேசிய கொடிகள் எனப் பொது அறிவு குறித்த கேள்விகளுக்குத் தயாராகும் வகையில்  வீட்டில் வாங்கி படித்து வருகிறார்.இந்நிலையில் இவற்றை அடையாளம் காண்பதில்   மழலை சிறுவன் சாய் சித்தார்த்தின் ஆர்வத்தை கண்ட மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிறுவனுக்குப் பயிற்சி அளித்துள்ளனர்.

இதில் அனைவரும் வியக்கும் வகையில் சிறுவன் சாய் சித்தார்த் உலக வரைபடங்கள் மற்றும் கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களைக் கூறி அசத்தியுள்ளார்.இவரது இந்தச் சாதனையைப் பாராட்டி அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட்“ என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கவுரபடுத்தி உள்ளனர்.இதே போலப் பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த இரண்டு வயது குழந்தை சாய் சித்தார்த்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *