Government of Sweden: விசா பெற கட்டுப்பாடுகள்!

Advertisements

இனி  விசா பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து சுவீடன் அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர் துறை  அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான ஷென்கன் விசா (Schengen Visa) நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் (Sweden) நாடும் அங்கீகரித்து வந்தது.

சுற்றுலா தவிர, சுவீடனில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், அங்கு தங்கி பணியாற்றவும் பல நாடுகளிலிருந்துஅங்கு மக்கள் செல்கின்றனர். ஆனால், தற்போது சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் குடி புக நினைக்கும் அனைத்து அயல்நாட்டினருக்கும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க உள்ளது.

சுவீடனில் தங்க விரும்புபவர்கள் இங்கு தாங்களாகவே வேலையை தேடி கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் அரசாங்க உதவி இல்லாமல் தங்களை தேவைகளை தாங்களே பார்த்து கொள்ள முடியும். சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூக குறியீடுகளை குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்பதும் இனி கட்டாயம். சுவீடன் நாட்டு மொழியான சுவீடிஷ் (Swedish) மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர். அதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும். இங்கு தங்கி பணியாற்ற விரும்புபவர்கள் ஒவ்வொருவரின் “சமுதாய புரிதல்” குறித்து ஒரு ஆய்வாளரின் அறிக்கை பெறப்படும்.

கல்வி கற்று, பிறகு வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப்படும். மேலும் “சுவீடனுக்கு அனைவரும் வரலாம். ஆனால் சுவீடன் சட்டதிட்டங்களை  பின்பற்ற வேண்டும். சுவீடிஷ் மொழியை கண்டிப்பாக கற்க வேண்டும். அப்போது தான் சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது  புரியும். என சுவீடனின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜோகன் பெர்சன் (Johan Pehrson)தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன், ஃபாஸ்ட் டிராக் (fast track) எனப்படும் “விரைவு பரிசீலனை” முறையில் வழங்கப்பட்டு வந்த விசா வழங்கலை சுவீடன் நிறுத்தியது குறிப்பிடத்  தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *