ரயில் பயணிகளுக்கு நற்செய்தி !  

Advertisements

சென்னை:

பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த 2017ம் ஆண்டு ‘நிர்பயா’ நிதியின் கீழ் 500 கோடி ரூபாய் மதிப்பில், 900 ரயில் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே அறிவித்தது.

ஆனால், பெரும்பாலான ரயில் நிலையங்களில் இன்னும் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
குறிப்பாக, சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள 128 ரயில் நிலையங்களில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

சென்ட்ரல், எழும்பூர், மூர் மார்க்கெட் வளாகம், மாம்பலம், கடற்கரை, தாம்பரம், பேசின்பாலம், திருவள்ளூர், நுங்கம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், செங்கல்பட்டு, திருமயிலை, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 500க்கும் மேற்பட்ட ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, சென்னை புறநகர் மற்றும் புறநகர் அல்லாத நிலையங்கள் உள்ளடக்கிய, 74 ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பணிகள் துவங்கி பல மாதங்கள் ஆகின்றன. இன்னும், பணிகள் முடித்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.

இதனால், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே போலீசார் கூறியது ரயில் நிலையங்களில் பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல், போலீசார் இல்லை. ஏற்கனவே, 30 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதுபோல, பல்வேறு ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மெத்தனமாக நடக்கின்றன.
எனவே, ‘சிசிடிவி’ கேமராக்கள் விரைவாகப் பொருத்த வேண்டுமென நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம்.

தெற்கு ரயில்வேயில் பயணியர் வருகை அதிகமாக உள்ள 90க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமரா பொருத்துவதற்கான பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு, சென்னை – ஜோலார்பேட்டை; அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணிகள், இந்த நிதி ஆண்டுக்குள் முடிவடையும் எனத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *