
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தை உட்கொண்டு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்த மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் இந்த ஸ்ரீசன் பார்மாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து அந்த மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் ஆலையில் ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் அந்த நிறுவனத்தை மூடி முத்திரையிட்டனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிவு அலுவலகத்தையும் பூட்டினர்.
மத்தியப் பிரதேசக் காவல்துறையின் ஏழு பேர் கொண்ட குழுவினர் சென்னைக்கு வந்து ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதனைக் கைது செய்துள்ளனர்.
