
சென்னையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் விசாரணைக்காகத் தங்கள் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இது தொடர்பாகக் கோல்டிரிப் மருந்தைத் தயாரித்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மா பதிவு அலுவல கத்தையும், சுங்குவார்சத்திரத்தில் உள்ள அதன் ஆலையையும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் மூடி முத்திரையிட்டுள்ளனர்.
இதையடுத்து ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதனைக் கைது செய்த மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அவரை விமானத்தில் மகாராஷ்டிரத்தின் நாக்பூருக்குக் கொண்டுசென்றனர்.
அங்கிருந்து சாலைவழியாக மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
