சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ்-ஏ ஆகிய 2 செயற்கைக் கோள்களைச் சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் இரு பாகங்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. தீவிர ஆய்வுக்குப் பிறகு இரண்டையும் இணைக்கும் பணி வெற்றி பெற்றது.
ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்ட வெற்றியால் உலக அளவில் இந்திய விஞ்ஞானிகளுக்கும், இந்திய நாட்டிற்கும் புகழ் சேர்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தை வெற்றி பெறச் செய்யப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளைத் த.மா.கா. சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டின் நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இது முதல் வெற்றி என்பது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.


