Female doctor murdered: பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்!

Advertisements

கொல்கத்தா:கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய பிரச்சனை குறித்த எனது கடிதத்திற்கு தாங்கள் பதில் அனுப்பாதது ஏன்?

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை உணராது மத்திய அமைச்சர் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.பாலியல் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *