
திமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல் மாவட்டத்தின் முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நயினார் நாகேந்திரன், மூலிகை வளமிக்க கொல்லிமலையின் கனிம வளங்கள் திமுக அரசால் சூறையாடப்படுவதாகக் கூறினார்.
மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாகவும், போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதாகவும், முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கெல்லாம் திமுக அரசின் திறனற்ற நிர்வாகமும், ஊழல் ஆட்சியும் தான் காரணம் என்றும் அதனால் அந்த ஆட்சியைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.



