
1 தொகுதிக்கு ரூ. 20 கோடி; திமுக மறைத் திருக்கும் இடங்கள் அம்பலம்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் அளவில் திமுக மேலிடம் பணம் ஒதுக்கி இருப்பதாகவும் , தற்பொழுது அந்த பணம் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று விட்டது எனவும் பரபரப்பு தகவல்கள் பேசப்படுகின்றன .
திமுகவினர் ஒவ்வொரு தொகுதியிலும் பணத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும் என தற்பொழுது, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் வெட்ட வெளிச்சமாக பேசி இருப்பது தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நான்கு முனைப் போட்டியை சந்திக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. திமுக அதிமுக தவெக நாம் தமிழர் என நான்கு முன்னணி கட்சியினரும் தேர்தல் களத்தில் நேரடியாக மோதுகிறார்கள் .
முந்தைய தேர்தல்கள் போல் அல்லாமல் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலா ஒரு தொகுதியில் சுமார் 15 கோடி ரூபாய் அளவில் செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் .
தற்பொழுது , அனைத்து கட்சி தரப்பிலும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாராகி வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தலா ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள் . இது தவிர நேர்காணலும் விரைவிலேயே நடைபெற இருக்கிறது .
அந்த வகையில் , திமுக அதிமுக தரப்பில் தலா 10 கோடி ரூபாய் அளவில் செலவு செய்ய தயாராக இருக்கும் நிர்வாகிகளுக்கு தான் தேர்தல் சீட்டு கிடைக்கும் என்கிறார்கள் . அதிமுகவை பொறுத்த வரையில் மிகப்பெரிய தொழிலதிபரான அதானி குழுமம் பாரதிய ஜனதா கட்சி வழியாக தேவையான ஒட்டுமொத்த பணத்தையும் தருவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக பேசப்படுகிறது .
எனவே அதிமுக தரப்பில் தலா ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் அளவில் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது . இதற்கிடையே தேமுதிக தரப்பில் போதிய பணம் இல்லாததால் கூட்டணி சேருவதற்கு தலா ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். விரைவிலேயே தேமுதிகவும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இந்த பணத்தை பெறலாம் என்று தெரிகிறது.
இதே சமயத்தில் திமுக தரப்பில் வேட்பாளர் தகுதியாக 10 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது . இது தவிர திமுக மேலிடம் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் 20 கோடி ரூபாய் தயார் செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள் .இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசும் பொழுது திமுகவில் தொகுதிக்கு 20 கோடி ரூபாய் தயார் செய்து அந்தந்த பகுதிக்கு அனுப்பி விட்டார்கள் என்ற கருத்தை தெரிவித்தார்.
தற்பொழுது , இது குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் பேசும்போது திமுக தரப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் பணம் ஒதுக்கி அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இந்த பணம் எங்கெங்கே இருக்கிறது என்பது பற்றிய தகவல் அனைத்தும் எனக்கு தெரியும் சமயம் வரும்பொழுது அந்த தகவலை நான் வெளியிடுவேன் என தெரிவித்திருக்கிறார் .
நைனார் நாகேந்திரனின் அப்பட்டமான இந்த பேச்சு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது . திமுகவை பொருத்த வரையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் பணம் மறைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள் .
அதேசமயம் அதிமுக தரப்பில் இன்னும் தொகுதி வாரியாக பணம் அனுப்பப்படவில்லை வருகிற ஜனவரி மாதம் அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்படும் என சொல்கிறார்கள் . அதாவது தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே தொகுதி வாரியாக மூட்டை கணக்கில் பணம் அனுப்பப்பட்டு விடும் என்கிறார்கள்.
இது பற்றி தகவல் அறிந்த திமுக மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.வருகிற சட்டமன்றத் தேர்தலில் பணம் என்பது தண்ணீராக செலவு செய்யப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .
தமிழக வெற்றி கழகத்திலும் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் அளவில் செலவு செய்வதற்கு கட்சி மேலிடம் தயாராகி வருகிறது. இது தொடர்பான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் புசி ஆனந்த் மறைமுகமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தேர்தல் செலவுக்காக தமிழக வெற்றி கழகம் சார்பில் சுமார் 2000 கோடி ரூபாய் செலவிடுவதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
எனவே திமுக அதிமுக மட்டுமல்ல தமிழக வெற்றி கழகம் சார்பிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் பண விளையாட்டு நடைபெற காத்திருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .



