
மத்திய மாநில அரசிடமிருந்து காவலர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக 200 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயுதப்படை ஆளிநிர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், பொங்கல் பண்டிகை கொண்டாடினார், இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோர், உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்,
கிராமிய கலைகள் நயத்துடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுப் மற்றும் நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால்:மற்றதுறையை விட நமது காவல் துறை பணி மிகக் கடினமான பணி ஆகையால் இது போன்ற பொங்கல் பண்டிகையில் இவர்களுக்கு ஒரு மணமழிச்சி ஏற்படும் வகையில் கோண்டடுவது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது,
சென்னை பெருநகர காவல் துறை பொருத்தம் படி ஒரு சிறப்பான காவல் பணியை ஆற்றி வருகிறார்கள், சிறப்பாகப் பணியாற்றி வரும் காவல்துறைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
காவல்துறை காவலர்களுக்காக ஒரு புதிய சேவை திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காவலர்களுக்குப் பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்காக மருத்துவ உதவிக்காகக் காவலர்களுக்கு 7 கோடியிலிருந்து ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஆக நிதி அதிகரித்து ஒரு குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. தற்போது 8 லட்சமாக உயர்த்தப்பட்டு இத்திட்டம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
நமது துறையில் மன அழுத்தம் அதிகம் உள்ளது மான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால் அவர்களுக்கு மன நல மருத்துவ நிபுணர்களைக் கொண்டு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,
மத்திய மாநில அரசு நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் செலவில் 400 காவலர் குடியிருப்பு பெரும்பக்கதில் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனடிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

