
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேரில் சென்று பார்வையிட்டார்.
மேற்கு வங்கத்தின் வடபகுதியான டார்ஜிலிங்கில் ஒரே நாளில் 50 செண்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கால் பாலங்கள், சாலைகள், வீடுகள், கட்டடங்கள் உடைந்தும் இடிந்தும் சேதமடைந்தன. இந்த இயற்கைப் பேரிடரில் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்டா, மேற்கு வங்கச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
