Advertisements

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவையென அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள்மீதும் அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். இந்நிலையில், உலக நாடுகளின் மீதான இந்த வரிகளை எதிர்த்த வழக்கு நேற்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், தேசிய அவசர நிலையின்போது அதிபருக்குப் பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது என்று தெரிவித்தனர்.
மேலும், தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் வரி விதித்துள்ளதாக வாஷிங்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதிபர் டிரம்ப் பேசியபோது, இந்த வரிகள் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டிற்கு பேரழிவாக இருக்கும். இது நம்மைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்தும் என்றும் கூறினார். தொழிலாளர்களுக்கும், அமெரிக்காவில் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, வரி எப்போதும் சிறந்த ஆயுதமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Advertisements


