
ஒடிசா மாநிலத்தில் பாஜக மற்றும் பிஜேபி கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதைக் கிண்டல் செய்யும் வகையில், இரு கட்சிகளுக்கும் இடையே பிறந்த “10 ஊழல் குழந்தை”களுக்கு பெயர் சூட்டும் விழா போலி பூஜையைக் காங்கிரஸ் கட்சி நடத்தியது.
புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில், நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தள (பிஜேடி) ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் பிஜே.டி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக மாநில பிஜேடி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு பாஜக மேலிடத் தலைவர்களுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பிஜேபி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பாஜக தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா சென்றபொழுது முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டிப் பேசியபிறகு இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாமென எதிர்பார்க்கப்படு
கிறது. “போலி குழந்தைகளுக்குப் பூஜை”
நடத்தி, காங்கிரஸ் கிண்டல்இதற்கிடையில் இந்தக் கூட்டணிகுறித்து கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சி, பாஜக பிஜேடி இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற திருமண உறவில் பிறந்த “10 ஊழல் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போலியான பூஜை” ஒன்றை நேற்று நடத்தினார்கள்.
சுரங்க ஊழல், சிட்பண்ட் ஊழல், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, வேலை வாய்ப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு ஊழல்களைக் குறிக்கும் பெயர்கள் அந்தப் பொம்மை குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டு தாக்குதல் நடத்தும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்குக் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது.
ஏற்கனவே தெலங்கானா மாநில தேர்தலின்போது பாரதிய ஜனதாவுக்கும் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சிக்கும் இடையே இருக்கும் மறைமுக உறவைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இரு கட்சிகளுக்கும் போலியான திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடத்தி இருந்தனர்.
இதே பாணியில், கடந்த ஜனவரி மாதத்தில் ஒடிசாவிலும் பாஜக மற்றும் பிஜேடி கட்சிகளிடையே காங்கிரஸ் சார்பில் திருமணம் ஒன்றை நடத்தி வைத்திருந்தனர். தற்போது கூட்டணி உறுதியாகும் நிலையில் அந்த இரு கட்சிகளின் உறவில் பிறந்த 10 குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழா பூஜையைகாங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

