
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தி வழங்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து, செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யும் அதிகாரத்தைத் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி இங்குள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



