
கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை, வில்லிவாக்கம் கொளத்தூரில் 53 கோடி ரூபாயில் 184 கடைகளுடன் அமைக்கப்பட்ட வண்ண மீன் வர்த்தக மையத்தை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், சேகர்பாபுவும் இணைந்து ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
