Chow Chow Poriyal Recipe: குழந்தைகளுக்கு பிடித்த பொரியல்!

Advertisements

எப்போதுவும் காய்கறிங்களை வாங்கி அதனை வருப்பது, குழம்பு வைப்பது என்று மட்டுமே வீட்டில் செய்வீர்கள். ஒரே காய்கறிகளை மட்டுமே வறுத்து தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நிறைய காய்கறிகளை பொரியல் செய்து கூட்டு செய்து அதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட கொடுப்பார்கள் அது சுவைக்க மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான பொரியலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

சௌ சௌ – 1/2 கிலோ
தேங்காய் துண்டு – பாதி

பச்சை மிளகாய் – 6 நறுக்கியது.
வெங்காயம் – 1 நறுக்கியது

காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
கடலை பருப்பு – 3 ஸ்பூன்
சீரகம் – 3/4 டீஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – 1 கொத்து

உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரியலுக்கு தேவையான அளவு.

செய்முறை:

முதலில் தேங்காயை பாதி எடுத்து துருவிகொள்ளவும்.பின்பு பாதி அளவு தேங்காயை எடுத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் –  7, சீரகம் – 3/4 டீஸ்பூன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1/4 டீஸ்பூன் சேர்த்து பொரிந்து வரும் நிலையில் சீரகம் சிறிதளவு சேர்க்கவும் பின்பு உளுத்தம்பருப்பு 4 ஸ்பூன், கடலை பருப்பு – 3 ஸ்பூன் சேர்க்கவும்.

ஓரளவு வறுபட்டவுடன் அதில் காய்ந்த மிளகாயை பாதியாக நறுக்கி போடவும். கடைசியாக கருவேப்பிலை போட்டு வறுபட்டவுடன், நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும் 2 நிமிடம் வறுக்கவும்.

பின்பு வெங்காயம் வதங்கிய உடன் நறுக்கி வைத்த சவ் சவ்வை அதில் சேர்த்து ஒரு முறை அனைத்தையும் கலந்து விடவும். கலந்த பின் கடைசியாக உப்பு சேர்த்து கலந்து விடவும்.

சவ் சவ் வேகும் அளவிற்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விடவும். 3 அல்லது 4 நிமிடத்தில் வெந்து விடும்.

இப்போது எடுத்து பார்த்தால் வெந்துவந்திருக்கும் பின்பு அதில் நாம் அரைத்து வைத்த தேங்காயை எடுத்து அதில் சேர்க்கவும். அதனை ஒரு முறை கலந்து விடவும் இப்போது தண்ணீர் வற்றும் வரை கலந்துவிடும்.

கடைசியாக துருவி வைத்த தேங்காயை எடுத்து அதில் சேர்த்து கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கிவிடவும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *