
கோவையில், உலக புத்தொழில் மாநாட்டையும் அவிநாசி மேம்பாலத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கோவையில், கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்குச் சென்றடைந்தார். பின்னர் அவருக்கு, விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர், கொடிசியா அரங்கிற்குச் சென்று உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த அவிநாசி மேம்பாலத்தையும் திறந்து வைக்கிறார். இந்நிலையில், இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
