chennai:மகளின் தோழியை கர்ப்பமாக்கிய அப்பா.. பல அபார்ஷன்.. சென்னை போலீஸுக்கு ஓடிய பெண்!

Advertisements

சென்னை: சென்னையில் இளம்பெண் ஒருவர், தன்னுடைய தந்தை மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. இதுகுறித்து போலீசிலும் புகார் தந்துள்ளார்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு 20 வயதாகிறது.. இவரது அப்பா பெயர் மோசஸ் செல்லதுரை… மதப்போதகர் என்று சொல்லப்படும் மோசஸ் செல்லதுரை, ஒரு வழக்கறிஞரும்கூட.

பேட்டி: இந்நிலையில், பெற்ற அப்பாவை பற்றியே பரபரப்பு புகார் ஒன்றை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் இளம்பெண்.. அத்துடன், செய்தியாளர்களிடம், தன்னுடைய தந்தையை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்திருக்கிறார். “என் அப்பா மேலே, நான் புகார் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன்.. என் அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.. ஆனால், திருமணம் செய்ததிலிருந்தே என் அப்பா, அம்மாவுக்குள் நிறைய பிரச்சனை இருந்தது.

என் அப்பா ஒரு வழக்கறிஞர்.. ஆனால், ஒரு அமைப்பை வைத்து நடத்தி வருகிறார்.. தன்னை பாதிரியார் என்றும் சொல்லி கொண்டு, நிறைய பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.. நிறைய பெண்களுடன் கள்ள தொடர்பும் வைத்திருக்கிறார்.. இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்ததையடுத்து, நாங்கள் ஒவ்வொரு முறையும் அவரை மன்னித்து விட்டோம்.

திருமணம்: ஆனால், ஒருகட்டத்தில், ஒரு பெண்ணை திருமணமே செய்து கொண்டார்.. இந்த விஷயம் தெரிந்து, என் அப்பாவைவிட்டு, என் அம்மா பிரிந்து விட்டார்.. ஆனா, முறைப்படி விவகாரத்து ஆகவில்லை. என் அப்பா வழக்கறிஞர் என்பதால், அவரிடம் புகார் தருவதற்காக ஒரு குடும்பம் அணுகியது… அந்த குடும்பத்திலிருக்கும் பெண், என்னுடைய தோழி ஆவார். அந்த தோழிக்கு 24 வயதாகிறது.. அந்த பெண்ணையும் கல்யாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்றுள்ளார் என் அப்பா.

அபார்ஷன்: என் அம்மா, என் அப்பாவிடம் பேசுவதில்லையே தவிர, நான் அவருடன் பேசிக்கொண்டுதான் இருந்தேன்.. ஆனால், இதை பற்றி எதுவுமே என்னிடம் சொல்லவில்லை.. ஒரு குடும்பம் இருக்கும்போது, இப்படி கள்ளத்தொடர்பு வைத்து கொள்வது நியாயம் என்று வாதாடுகிறார்.. நிறைய பெண்களை இப்படியே கர்ப்பமாக்கிவிடுகிறார்.. பிறகு அபார்ஷனும் செய்துவிடுகிறார்.

பாதிரியார் என்று சொல்கிறார்.. ஆனால், பாஸ்டருக்கான சான்றிதழினை முப்பதாயிரம் கொடுத்துதான் வாங்கினார்.. ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில் ஒரு பெண்ணை மணந்து அந்த பெண்ணை சிறிது நாட்களிலேயே கழட்டி விட்டுவிட்டார்.

பரபரப்பு: என் அம்மா இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால், பல பெண்களுடன் தொடர்பு வைத்து‌ கொண்டிருந்துள்ளார். பெண்கள் அனைவரும் முன்வந்து புகார் அளிக்க பயந்த நிலையில் இதனையே சாதகமாக ஆக்கிக்கொண்டுள்ளார். அதனால், நானே புகார் தர வந்துள்ளேன்.. என் அப்பாவை கைது செய்யவில்லயானால், என்னைபோலவே பல பெண்கள் புகார் அளிக்க வருவார்கள். அதனால், என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை, பெண்ணின் தந்தை மறுக்கிறாராம்.. தன்னிடம் 25 லட்சம் பணத்தை பறிக்கக்கூடிய நோக்கில் இந்த புகாரை சொல்வதாக, மோசஸ் செல்லத்துரை குற்றம் சாட்டியுள்ளார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *