
சென்னை கொளத்தூரில் புதிய திருண மண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நேரத்தில் 15 சோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் இன்று பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
அதன்பின் ஒரே நேரத்தில் 15 சோடிகளுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்து மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு , மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



