
2,600 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு!
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 2600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த நிலையில் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 27வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

