Boat capsized: 18 பள்ளி மாணவர்களைக் காணவில்லை!

Advertisements

ஆற்றில் படகு மூழ்கியதில் 18 பள்ளி மாணவர்களைக் காணவில்லை…

பாட்னா: பீஹாரில், பஹமதி ஆற்றில் 34 மாணவர்களுடன் சென்ற படகு மூழ்கியது. அதில் 18 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்கள் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.

பீஹாரின் முசாபார் மாவட்டத்தில் இன்று காலைப் பள்ளி மாணவர்கள் 34 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற பஹமதி ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென ஆற்றில் மூழ்கியது.இதில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் 18 பேரைக் காணவில்லை.

தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பின்னர் தகவல் அறிந்த பெற்றோர்கள்மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தில் கூடி உள்ளதால் அங்குப் பரபரப்பு நிலவுகிறது.

இச்சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், உயர் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் என்றார். படகு விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *