BB8 Soundariya: கொஞ்சம் கிளாமர்.. கொஞ்சம் ஹோம்லி.. ஆளை அசத்தும் பிக் பாஸ் சௌந்தர்யா!

Advertisements

பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளவர் நடிகையும் மாடலுமான சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கிளாமர் மற்றும் ஹோம்லி லுக் ஃபோட்டோஸ்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றை இங்குக் காணலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியாளர்களில் ஒருவராகக் களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவர் மாடலாகத் தனது கெரியரைத் தொடங்கி தற்போது படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆன ‘வேற மாறி ஆஃபீஸ்’ வெப் சீரிஸ் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றார்.

தனது கனீர் குரலால் பல இடங்களில் அவமானப்பட்டுள்ளேன் எனப் பிக் பாஸ் போட்டியில் தனது அறிமுக வீடியோவிலும், விஜய் சேதுபதியிடமும் கூறினார். உடனே குரலில் இல்லை அழகு குணத்தில்தான் அழகு உள்ளது என விஜய் சேதுபதி கூறி, அவரைத் தைரியத்தோடு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

மாடல் அழகியான சௌந்தர்யா நஞ்சுண்டனை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர்பின் தொடருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும், சக போட்டியாளர் தர்ஷிகா, சௌந்தர்யாவின் குரலைக் கிண்டல் செய்யும் விதமாக இருந்ததால் பிக் பாஸ் ரசிகர்கள் சௌந்தர்யாவுக்கு ஆதரவாகவும், தர்ஷிகாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் தனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி எனவும், இந்த நிகழ்ச்சிமூலம் தனது திறமையை மக்களிடம் வெளிக்காட்ட முடியும் என நம்புவதாகச் சௌந்தர்யா நஞ்சுண்டன் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *