
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் இசை பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸ் கலையரங்கத்தில், நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குவிருது வழங்கும் விழா ஆரோவில் பாரத் மாஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில்தமிழக ஆளுநர் ரவி மற்றும் ஆந்திரா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆரோவில் நிர்வாகக்குழுவின் தலைவர் R.N. ரவி ஆகியோர் கலந்து கொண்டார் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினர்.
பின்னர் விழாவில் பேசிய ஆளுநர் ரவி பேசுகையில் ஆரோவில் சர்வதேச நகரத்தில் மரம் செடி, கொடிகள் மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக வாழ்வதாகக் கூறினார் இதனைத்தொடர்ந்து ஸ்வரம் இசை பூங்காவைத் திறந்து வைத்து இங்குத் தயாரிக்கப்பற்டு காட்சி படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகள் கருங்கல் இசைத்தூண், காற்று இசைத்தூண், மூங்கில் இசை, நரம்புக் கருவிகள் எனப் பல கருவிகள் உருவாக்கப்படுகின்றன. இதனைத் தமிழக ஆளுநர் RN.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோர் திறந்து வைத்து இசை கருவிகளை இசைத்து இசைக்கேட்டு மகிழ்ந்தனர்

