
இந்திய விமானப்படை நாளையொட்டிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமானப்படை நாளையொட்டிப் படைவீரர்களுக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை அதன் துணிச்சல், கடமை, நேர்த்தி ஆகியவற்றை எப்போதும் வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நமது படையினர் வான்பரப்பைக் காப்பதுடன், இயற்கைப் பேரிடர்க் காலங்களிலும், மனிதநேயத்திட்டங்களிலும் ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறனுடனும் தயார் நிலையிலும் நமது விமாப்படை இருப்பது நாட்டுக்கே பெருமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
