
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிசோரைக் கைது செய்ய வலியுறுத்திக் காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு ராகேஷ் கிஷோருக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்மல்குமார், செயலாளர் பிரபு, துணைச் செயலாளர் ரேகா, பொருளாளர் சோனியா உமாசங்கரி, ஹரிஹரன், ஸ்டாலின், அருண், ஆதவன், சந்துரு, ஹரி, சுதன், பிரதீப்குமார், லோகு, கருணாநிதி, லிங்கேசன், கார்த்திகேயன், நரேந்திரன், கதிரவன், ஆல்பின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
