நடிகை சீதா வீட்டில் திருட்டு!

Advertisements

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இப்போதும் சீரியல், சினிமா எனப் பிஸியாக நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாது வீட்டுத்தோட்டம் தொடர்பாக இவரது யூடியூப் வீடியோக்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. சென்னை, விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார் சீதா.

இந்நிலையில், இவரது வீட்டில் இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை சீதா காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *