
கேரளாவில் பிறந்து, தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் கடந்த 13 ஆண்டுகளாக நடித்து வரும் பிரபல நடிகை தான் மாளவிகா மேனன்.
2011ம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை இவர் தொடங்கினார்.
கடந்த 2013ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் விக்ரம் பிரபுவின் “இவன் வேற மாதிரி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார்.
“விழா”, “பிரம்மன்”, “வெத்து வேட்டு” மற்றும் “நிஜமா நிழலா” போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாகத் தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான “அருவா சண்டை” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
தற்போது தொடர்ச்சியாக மலையாள மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் இரு மலையாள திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அட்டசமான போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

